அண்ணன் மீது தண்ணீர் ஊற்றியற்காக தம்பிக்கு சிறை தண்டனை!
அமெரிக்காவில் தனது மூத்த சகோதரர் மீது இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றிய குற்றத்திற்காக 64 வயது தம்பி கைது செய்யப்பட்டுள்ள வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
சாப்பாட்டு விசயத்திற்குச் சண்டை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லி கவுன்டி என்ற பகுதியில் வசிப்பவர் டேவிட் ஷெர்மன் பவெல்சன்(64). இவரது அண்ணனுக்கு 65 வயதாகிறது.
இருவருக்கும் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சாப்பாட்டு விசயத்திற்காகச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஷெர்மன் பவெல்சன் தான் தயாரித்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்திருக்கிறார்.
அதனை அவரது சகோதரர் எடுத்து முழுவதும் சாப்பிட்டுள்ளார். தனக்குத் தராமல் எல்லாவற்றையும் அவர் சாப்பிட்டு விட்டார் என அவரை திட்டியுள்ளார்.
30 ஆண்டு சிறை தண்டனை
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் தம்பி, அண்ணன் முகத்தில் மேசையிலிருந்த இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து ஊற்றியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
65 வயது தம்பி டேவிட் ஷெர்மனை காவல்துறை கைது செய்துள்ளது. அமெரிக்கா அரசின் சட்டப்படி குடும்பத்திலுள்ள ஒருவரைத் தெரிந்த துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் டேவிட் ஷெர்மன் பவெல்சனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
@twitter
சாதாரண விசயத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டதால் நேர்ந்த அசம்பாவிதத்திற்கு இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் வழக்கு இணைய தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.