தாலிபான்களின் கைப்பிடியில் சிக்கிய இந்தியர்களின் நிலை என்ன? வெளியான புதிய தகவல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் சிக்கிய 168 இந்தியர்கள் பத்திரமாக விமானம் மூலம் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு இந்தியர்கள் வந்ததை அறிந்து கொண்ட தலிபான்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சுற்றி வளைத்து கொண்டனர். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் 107 இந்தியர்களை தாலிபான்கள் கடத்திவிட்டதாக ஊடகம் முழுவதும் பரவியதால் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தாலிபான்கள் ஆவணங்கள் சரிபார்ப்பதற்காக மட்டுமே இந்தியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாலிபான்களிடம் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆப்கானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
விமானம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் காலை 10.15 மணியளவில் தரையிறங்கியுள்ளது.