பூங்காவில் வாக்கிங் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! சிதறி கிடந்த மண்டை ஓடுகள்...தெறித்து ஓடிய பொது மக்கள்
தமிழகத்தில், பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் வாக்கிங் செல்வது வழக்கம்.
இந்நிலையில் பூங்கா அருகே உள்ள சுற்றுசுவர் பக்கத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் மற்றும் 2 மூட்டைகள் கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 8 மனித மண்டை ஓடுகள், 2 மூட்டை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் சில நாட்களாக பலர் காணாமல் போனதால் அவர்களது எலும்பு கூடுகளா? இல்லை கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட உடல்களை? என்ற கண்ணோட்டத்தில் காவல் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது வெளியில் எலும்பு கூடுகள் குவிந்து கிடந்ததால் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.