ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடியை திருடிய வினோத சம்பவம்
இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடியை திருடிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைமுடி திருட்டு
பொதுவாகவே நாம் ஆள்கள் யாரும் இல்லாத வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து நகை, பணம், பொருட்கள் ஆகியவற்றை திருடி செல்வதை கேள்வி பட்டிருப்போம். ஆனால், பெண்களின் தலைமுடியை திருடிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்திய மாநிலமான ஹரியானா, பரிதாபாத்தில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் ரஞ்சித் மண்டல் என்பவர் வாழ்ந்து வருகிறார்.
இவர், விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக, பெண்களின் தலைமுடியை மூலப்பொருளாக தனது வீட்டில் வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், இவரது வீட்டில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவர்கள், ரஞ்சித் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, வெளியில் சென்றிருந்த ரஞ்சித் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பக்கத்து அறையில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்த போது தலைமுடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், பொலிஸார் திருடர்களை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |