பிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள்... பதைபதைக்கச் செய்துள்ள ஒரு செய்தி
இந்தியாவில், பிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச்சென்ற சம்பவம் மனதை பதைபதைக்கச் செய்துள்ளது.
தஞ்சாவூர் என்னும் இடத்தில், புவனேஸ்வரி (26) என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தனது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள், தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் தூக்கிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் புவனேஸ்வரி.
அவற்றில் ஒரு குழந்தை ஒரு வீட்டின் கூரையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ள நிலையில், பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் அருகிலுள்ள அகழி ஒன்றில் சடலமாகக் கிடந்த மற்றொரு குழந்தையைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆனால், வன இலாகா அதிகாரிகள் புவனேஸ்வரியின் குற்றச்சாட்டை சந்தேகிக்கிறார்கள்.
காரணம், பொதுவாக குழந்தைகளை குரங்குகள் பிடுங்கிச் சென்றால், குழந்தைகளின் உடலில் கீறல்கள் காணப்படும், கை கால்கள், மூட்டுக்களிலிருந்து விலகியிருக்கும்.
ஆனால், இந்த குழந்தைகள் உடலில் அப்படி எந்த காயங்களும் இல்லை. ஆகவே, நடந்தது என்ன என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
