எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை மீண்டும் அச்சுறுத்துகிறாரா புடின்!
ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படாததால் பொருளாதாரம் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் குழம்பி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸின் செய்தி நிறுவனத்திடம் ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்த தகவலில், ரஷ்யா மேற்கு நாடுகளின் எல்லை பகுதிகளில் தங்களின் ராணுவ பலத்தை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவானது, எந்தவொரு நாட்டிற்கும் ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று எழுகிற எண்ணத்தை தடுத்து நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்காலங்களில், ரஷ்யாவின் மேற்கு எல்லை அண்டை நாடுகள் சில தங்களின் ராணுவ பலத்தை அதிகரித்து வருவதால் இதற்கான திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு வகுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு முன்னெடுப்பானது கண்டிப்பாக தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், யாருடையநாட்டின் மனதையும் அச்சுறுத்தாத நிலையில் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு எதிரான சமத்துவ நிலையை அடையும் முன்நகர்வு என தெரிவித்துள்ளார்.