ரூ.80 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனம்: ஃபேஷன் துறையில் ஓங்கி ஒலிக்கும் அபி டொமினிக் யார்?
பேஷன் உலகில் அபி டொமினிக் என்ற பெயர் பிரபலமானது, ஆனால் இந்த பெயரை அவர் சம்பாதிப்பதற்கு தனது 9-5 மணி வரையிலான வேலையை விட வேண்டியது இருந்தது.
2013ம் ஆண்டு ஹை லைஃப் எக்ஸிபிஷன் என்ற நிறுவனத்தை தொடங்கிய இவர், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இந்தியாவின் 30-க்கும் அதிகமான நகரங்களில் பேஷன் கண்காட்சிகளை நடத்தும் நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.
யார் இந்த அபி டொமினிக்?
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் CSIBER ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டில் மார்க்கெட்டிங் MBA பட்டம் பெற்றவர் அபி டொமினிக்.
பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட அபி டொமினிக் ரூ.15 லட்சம் முதலீட்டில் ஹை லைஃப் எக்ஸிபிஷன் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
இன்று இவர் ஹை லைஃப் எக்ஸிபிஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
ஹை லைஃப் எக்ஸிபிஷன் வளர்ச்சி
ஆரம்பத்தில் பாரம்பரிய ஆடைகளை மட்டுமே காட்சிப்படுத்திய ஹை லைஃப் எக்ஸிபிஷன் நிறுவனம், பின்னர் திருமண ஆடைகள், டிசைனர் ஆடைகள், ஆக்சஸரீஸ் மற்றும் தனித்துவமான நகைகள் ஆகியவற்றையும் காட்சிப்படுத்த தொடங்கியது.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதன் ஈர்க்கக்கூடிய ரூ.80 கோடி என்ற ஆண்டு வருவாயில் இருந்து வெளிப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் இருக்கும் டொமினிக், உலகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை மேற்பார்வையிட்டுள்ளார்.
ஹை லைஃப் எக்ஸிபிஷன் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அபி டொமினிக் வழங்கிய கருத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முக்கிய இரண்டு காரணிகளாக “உண்மையான உறவை உருவாக்குவதும், ஒப்பிட முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும்” தான் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |