236 பேருடன் சென்ற விமானம் மூன்று துண்டுகளாக உடைந்த சம்பவம்! உயிர் தப்பிய பெண் சொன்ன திக் திக் நிமிடங்கள்
236 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி மூன்று துண்டுகளாக உடைந்த சம்பவத்தில், அனைவரும் உயிர் தப்பிய நிலையில், அந்த சம்பவம் குறித்த இறுதிநிமிடங்களை பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் திகதி Cardiff-வில் இருந்து Girona-வுக்கு Britannia Airways நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு மேல் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட போது, அங்கு கடும் புயல் இருந்ததால், ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் உள்ள வயல்வெளிக்கு அருகில் விபத்திற்குள் சிக்கி மூன்று துண்டுகளாக உடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் ஒரு நாள் கழித்து இந்த விமானத்தில் பயணித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இருந்து அனைவரும் காப்பாற்றப்பட்டிருந்தாலும், இதனால் ஏற்பட்ட சிறு காயங்கள், மனரீதியாக ஏற்பட்ட கவலை, மனச்சோர்வு, விமான பயம் போன்ற உளவியல் பிரச்சனைகளை அவர்கள் அனுபவித்தனர்.
இந்த விபத்தில் இருந்த சில பயணிகள் தாங்கள் இறக்கப்போகிறோம் என்று நினைத்தாக கூறி, அந்த பயங்கரமான நாளை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
Caerphilly-யில் வசிக்கும் Catherine Allaway, விபத்து நடந்த அன்றைய தினம் தன்னுடைய 9 வயது மகள் Kirsty-Leigh-யுடன் ஒரு வார விடுமுறையை கழிக்கும் திட்டத்தில் இருந்துள்ளார்.
இது குறித்து Catherine Allaway கூறுகையில், நாங்கள் விபத்தில் சிக்குவதற்கு முன், வெளியே கரும்மேகம் சூழ்நிருப்பது போல் ஒருவித இருட்டாக இருந்தது. விமானநிலையத்தைச் சுற்றி மின்னல்கள் அடித்துக் கொண்டிருந்தன. அதன் விமானம் கட்டுப்பாட்டை இழந்த விஷயத்தை கேட்டவுடன், விமானத்தின் உள்ளே இருந்த ஆக்சிஜன் முகமூடிகள் தானாக கீழே வந்தன.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதைப் போல் உணர்ந்தேன். விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பீதியில் கூச்சலிட்டனர். சேற்றில் விழுந்தது போன்றும், மரங்கள் மீது மோதியது போன்றும் இருந்தது.
அப்போது ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். என் கால் வேறு சிக்கிவிட்டது. Kirsty-Leigh-யோ பயத்தில் வாந்தி எடுத்தால். அவள் வாந்தியை என்னால் நிறுத்த முடியவில்லை.
கண்ணீர்விட்டு அழுதோம். இன்னும் அந்த விபத்தை அனுபவித்து வருகிறேன். மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நான், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை சாப்பிட்டேன். எங்கள் வீட்டின் மீது விமானங்கள் பறக்கும்போது எனக்கு இந்த விபத்தின் ஞாபகம் தான் வருகிறது.
விமானத்தின் சத்தத்தை கேட்டாலே படுக்கையில் நடுங்குவேன், ஒவ்வொரு முறையில் நான் விமானம் தரையிரங்குவதை பார்க்க நேர்ந்தால், கண்கலங்குகிறேன் என்று கூறினார்.
Kirsty-Leigh கூறுகையில், எனக்கு முன்னால் இருந்த விமானத்தின் இருக்கை முன்னும், பின்னுமாக சென்றது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் என்னை தூக்கிக் கொண்டே ஓடு ஓடு ஓடு என்று கத்தியதாக கூறினார்.
இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு பயணியான Katie Sawyer கூறுகையில், நான் இந்த விபத்தில் சிக்கிய போது எனக்கு ஆறு வயது மட்டுமே, அதன் பின் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறினார்.
இந்த விபத்து குறித்து ஐந்த ஆண்டுகளுக்கு பின் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், மோசமான வானிலை, மின் தடை, தாமதமான புறப்பாடு போன்றவயே இதற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.