டி20 கோப்பையை தட்டித் தூக்கிய பும்ரா! அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
டப்லினில் நடந்த 2வது டி20 போட்டியில், அயர்லாந்தை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
கெய்க்வாட் அரைசதம்
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் அவுட் ஆனார். கெய்க்வாட், சாம்சன் அதிரடியில் மிரட்டினர். சாம்சன் 26 பந்துகளில் 40 ஓட்டங்களும், கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ஓட்டங்களும் விளாசினர்.
Twitter (BCCI)
கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 185 ஓட்டங்கள் குவித்தது. மெக்கர்தி 2 விக்கெட்டுகளும், யங் மற்றும் அடைர், ஒயிட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Twitter (BCCI)
இந்தியா அபார பந்துவீச்சு
எனினும் துவக்க வீரர் ஆண்ட்ரூ பால்பிரினி அதிரடியில் மிரட்டினார். அவர் 51 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்தார்.
இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சினால் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
Twitter (BCCI)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |