55 ரன்களில் சுருண்டு இலங்கை அணி படுதோல்வி! மொத்தமாக காலி செய்த இந்திய பவுலர்கள்
உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்திய அணி 357
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்கள் குவித்தது.
சுப்மன் கில் 92 ஓட்டங்களும், கோலி 88 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களும் விளாசினர். இலங்கை தரப்பில் மதுஷன்கா 5 விக்கெட்டுகளும், சமீரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Twitter
அடுத்து களமிறங்கிய இலங்கை அணியை தொடக்கத்திலேயே சிராஜ் சரித்தார். அவரது ஓவரில் கருணாரத்னே (0), குசால் மெண்டிஸ் (1), சமரவிக்ரமா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Twitter
Reuters
சுருண்ட இலங்கை அணி
அதன் பின்னர் இலங்கை அணி மீண்டு வருவதற்குள் முகமது ஷமி தனது புயல்வேக பந்துவீச்சால் நிலைகுலைய செய்தார். இதனால் இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷமி 5 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter
இதன்மூலம் இந்திய அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இரண்டாவது முறையாக 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |