சச்சின் சாதனையை எட்டிப் பிடிக்க மீண்டும் தவறிய விராட் கோலி: சோகத்தில் இந்திய ரசிகர்கள்
இலங்கை அணியுடன் சதம் அடிக்க தவறியதை அடுத்து சச்சின் சாதனையை சமன் செய்ய மீண்டும் ஒருமுறை விராட் கோலி தவறவிட்டுள்ளார்.
இலங்கை-இந்தியா மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர்.
இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளது.
Getty
இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில்(92), விராட் கோலி(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (82), என ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றனர்.
மீண்டும் தவறிய சாதனை
இந்த போட்டியில் சுப்மன் கில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என விளாசி 92 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்து இருந்த போது இலங்கை பந்துவீச்சாளர் மதுஷங்காவிடம் ஆட்டமிழந்தார்.
getty
இவரை தொடர்ந்து விராட் கோலி சதமடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்த போது அவரும் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் மட்டும் விராட் கோலி சதம் அடித்து இருந்தால் இது அவருக்கு 49வது சதமாக இருந்து இருக்கும்.
அத்துடன் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த சச்சினின் சாதனை விராட் கோலி சமன் செய்து இருப்பார்.
ஏற்கனவே இந்த வாய்ப்பை நடப்பு உலக கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் 85 ஓட்டங்கள் குவித்து விராட் கோலி தவறவிட்டு இருந்தார்.
Getty
அதை தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் 95 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய சதத்தை விராட் கோலி தவறவிட்டார். இந்நிலையில் மீண்டும் தனது 49வது சதத்தை விராட் கோலி தவறவிட்டுள்ளார்.
விராட் கோலி, சுப்மன் கில் இவர்களை தொடர்ந்து 56 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 82 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |