உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை வீழ்த்தினால் இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு
இலங்கை அணி எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 2023 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கான மிகப்பெரிய வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
358 ஓட்டங்கள் இலக்கு
13வது உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றனர்.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
FIFTY Partnership! ?
— BCCI (@BCCI) November 2, 2023
Virat Kohli & Shubman Gill looking in solid touch in Mumbai ?
Follow the match ▶️ https://t.co/rKxnidWn0v#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/92KFGcwmeM
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய அணியின் முன்னணி வீரர்களான சுப்மன் கில்(92), விராட் கோலி(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (82), என ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய அணிக்கான மிகப்பெரிய வாய்ப்பு
இந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
7 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2023 உலக கோப்பை தொடரில் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஏற்கனவே இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வரும் நிலையில், இதன் மூலம் இந்திய அணி உலக கோப்பை கனவு மேலும் பிரகாசமடையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |