குல்தீப் சுழலில் சுருண்ட இலங்கை அணி! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா
ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
துனித் வெல்லாலகே மாயாஜால சுழல்
இலங்கை - இந்தியா அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டி கொழும்பில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 213 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Twitter (ICC)
முதல் விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் குவித்திருந்த இந்திய அணி, வெல்லாலகேயின் மிரட்டலான சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Twitter (@OfficialSLC)
இஷான் கிஷன் (33), கே.எல்.ராகுல் (39) தாக்குப்பிடித்து ஆடினாலும் பின்னர் வந்த வீரர்களை அசலங்கா வெளியேற்றினார். துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளும், அசலங்கா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@OfficialSLC)
Twitter (ICC)
சொதப்பிய கேப்டன் ஷானகா
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா பந்துவீச்சில் நிசங்கா (6), சிராஜ் பந்துவீச்சில் திமுத் கருணரத்னே (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து குசால் மெண்டிஸ் 15 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய அசலங்கா 22 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், கேப்டன் ஷானகா 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
குல்தீப் யாதவ் மிரட்டல் பந்துவீச்சு
எனினும் தனஞ்செய டி சில்வா மற்றும் வெல்லாலகே அணியை காப்பாற்ற போராடினர். ஆனால் ஜடேஜா ஓவரில் தனஞ்செய டி சில்வா 41 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டு 171 ஓட்டங்கள் என தடுமாறியது. அப்போது பந்துவீசிய குல்தீப் யாதவ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Twitter (BCCI)
இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
Twitter (BCCI)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |