2வது டி20 போட்டியில் மாஸ் காட்டிய ஜடேஜா - இலங்கை தொடரை வென்றது இந்திய அணி
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் பதும் நிசாங்கா(75), கேப்டன் தசுன் சணகா(47) ஓட்டங்கள் அதிகப்பட்சமாக எடுத்தனர்.
தொடர்ந்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (74), சஞ்சு சாம்சன்(39), ஜடேஜா(45) ஓட்டங்கள் விளாச 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.