Ind vs NZ 1st Test Day 2: இந்திய அணிக்கு மோசமான நாள்! 46 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்
பெங்களூருவில் நடைபெற்றுவரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு மோசமாக அமைந்தது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
குறைந்தபட்ச எண்ணிக்கை
சொந்த மண்ணில் இந்திய அணியின் குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னதாக 1987-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெல்லி டெஸ்டில் இந்திய அணி 75 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
மறுபுறம், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவாகத் தெரிகிறது. அவரது ஸ்கோர் 90/1. நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. டெவன் கான்வே, வில் யங் களத்தில் உள்ளனர். கான்வே அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். டாம் லாதம் (15 ரன்) ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி தொடங்க முடியவில்லை.
இன்று காலை போட்டி தொடங்கியபோது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ரோஹித்தின் முடிவு தவறு என்பதை நிரூபித்தனர். ஸ்விங் மற்றும் பவுன்சியான ஆடுகளத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் காலூன்ற தவறிவிட்டனர்.
அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ஓட்டங்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.
கேப்டன் ரோகித் சர்மா (2 ஓட்டங்கள்) டிம் சவுத்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
5 பேர் டக்-அவுட்!
விராட் கோலி, சர்பராஸ் கான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைவரும் ஒரு ஓட்டம் கூட எடுக்க முடியவில்லை.
மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓருர்கே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |