டிராவில் முடிந்த இந்தியா - இலங்கை டெஸ்ட்; சாதனை பட்டியலில் இணைந்த சோனல் தினுஷா
ind vs sl 2nd test draw: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
டிராவில் முடிந்த இந்தியா - இலங்கை டெஸ்ட்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடியது.
5வது நாள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி, 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்கள் குவித்து டிரா செய்துள்ளது.
ஆட்டமிழக்காமல் 133 குவித்த சோனல் தினுஷா அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். சோனல் தினுஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
சாதனை பட்டியலில் சோனல் தினுஷா
இந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஃபாலோ-ஆன் செய்யப்பட்ட பிறகு, இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த டெஸ்ட் வரலாற்றிலேயே 3வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார்.

முன்னதாக 1948 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் விஜய் ஹசாரே மற்றும் 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வேவின் செய்த ஆண்டி ஃப்ளவரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 இன்னிங்ஸ்களிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த குமார் சங்கக்கார, திமுத் கருணாரத்ன ஆகியோருக்குப் பிறகு, இந்தச் சாதனையைப் படைத்த மூன்றாவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை தினுஷா பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |