ஹர்திக் பாண்டியா மீது டென்சனான விராட் கோலி! ரன்-அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பித்த வீடியோ
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த விராட் கோலி ரன் அவுட்டில் இருந்து தப்பிய பிறகு, ஹர்திக் பாண்டியா மீது தனது மரண பார்வையை வைத்தார்.
விராட் கோலியின் மிரட்டல் பார்வை
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தியுள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது ஒருநாள் கிரிக்கெட்டில் 45வது சதத்தை அடித்தார். 87 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 113 ஓட்டங்கள் விராட் கோலி குவித்து இருந்தார்.
விராட் கோலியின் சதத்தை நோக்கிய பயணத்தில் அவருக்கு அதிர்ஷ்டமும் சாதகமாக இருந்தது, ஏனெனில் இலங்கை வீரர்கள் விராட் கோலியை வெளியேற்ற இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அதை தவறவிட்டனர். மேலும் மிகவும் நெருக்கமான ரன்-அவுட் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தார்.
— Guess Karo (@KuchNahiUkhada) January 10, 2023
இந்திய அணியின் பேட்டிங்கில் 43வது ஓவரில் கசுன் ரஜிதாவின் டெலிவரியை எதிர்கொண்ட விராட் கோலி, பந்தை ஆன்-சைடில் நகர்த்தி விரைவான சிங்கிளுக்கு முயற்சித்தார், ஆனால் எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்டியா சிங்கிளுக்கு மறுத்து அவரை திருப்பி அனுப்பினார்.
இதனால் மைதானத்தின் பாதி தூரத்தை கடந்த விராட் கோலி மீண்டும் தன்னுடைய எல்லைக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது, நல்லவேளையாக மிக நெருக்கமான நிலையில் விராட் கோலி ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.
ஹர்திக் பாண்டியாவின் இந்த அழைப்பால் மகிழ்ச்சியடையாத கோலி, அவருக்கு மிகுந்த கோபத்துடன் மரண பார்வை ஒன்றை வழங்கினார், ஆனால் ஹர்திக் பாண்டியா அதை திரும்பி பார்க்கவில்லை.
சச்சின் சாதனை சமன்
விராட் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் சச்சினின் இந்த சாதனை அடைய விராட் கோலி 61 இன்னிங்ஸ் குறைவாக எடுத்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் மேலும் விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் 12500 ஒருநாள் ஓட்டங்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.