தோனியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தனது 37வது அரை சதத்தை விளாசியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் மூன்றாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 113 ஓட்டங்கள் குவித்தனர். மேலும் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் அபாரமாக இந்திய அணி கைப்பற்றவும் செய்துள்ளனர்.
இந்த போட்டியில் ஷிகர் தவான் 74 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்து தனது 37 வது அரை சதத்தை நிறைவு செய்தார். இவற்றில் 29 அரைசதங்கள் ஆசியாவிற்கு வெளியே நிறைவு செய்தது ஆகும்.
இத்துடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் ஷிகர் தவான் சமன் செய்துள்ளார். அதாவது ஆசியாவிற்கு வெளியே 29 அரைசதங்களை விளாசி இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ஷிகர் தவான் சமன் செய்துள்ளார்.
ஆசியவிற்கு வெளியே அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்களில் விராட் கோலி 49 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்...4 பேர் மரணம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அதனைத் தொடர்ந்து, சச்சின்-48, ராகுல் திராவிட்-42, கங்குலி-38, ரோகித் சர்மா-36, தோனி-29, ஷிகர் தவான்-29 அரைசதங்கள் விளாசியுள்ளனர்.