பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்...4 பேர் மரணம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
வடக்கு பிலிப்பைன்ஸின் லுசோன் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் நான்கு பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின் அடிப்படையில் இந்த நிலநடுக்கம் டோலோரஸ் நகருக்கு தென்கிழக்கே 11 கிமீ தொலைவில், 10 கிமீ ஆழம் குறைந்த பகுதியை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பெங்குவாட் மாகாணத்தை சேர்ந்த இருவர், அப்ரா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் பெயர் வெளியிடாத மற்றொரு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் உள்துறை செயலாளர் பெஞ்சமின் அபலோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Video shows crumpled roads and high-rise towers shaking as a magnitude 7 earthquake hit northern Philippines.
— Al Jazeera English (@AJEnglish) July 27, 2022
At least 4 people have died and 60 have been hurt ⤵️
?: https://t.co/U0BqwpZESN pic.twitter.com/XdAfUKOnKU
மேலும் இந்த நிலநடுக்கத்தில் 173 கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் 58 நிலச்சரிவுகள் பதிவாகி இருப்பதுடன் 60 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அபலோஸ் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்று வாரத்திற்கும் மேலான தொடர் முற்றுகை: உக்ரைனின் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான பதிலை அரசு உறுதியளிக்கிறது என பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.