மூன்று வாரத்திற்கும் மேலான தொடர் முற்றுகை: உக்ரைனின் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்
உக்ரைனின் மிக முக்கிய வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை, பல மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ரஷ்ய துருப்புகளின் குறிப்பிடதக்க ஆதாயமாக வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் உக்ரைனின் தெற்குப் பகுதி நகரங்களான மெலிடோபோல், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை கைப்பற்றும் முயற்சியில் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை மற்றும் மறுபகிர்வு ஆகியவற்றை ரஷ்ய படைகள் முன்நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தது குறித்து, உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரான Oleksiy Arestovych தெரிவித்துள்ள தகவலில், ரஷ்யாவிற்கு இது சிறிய தந்திரோபாய நன்மை என்று விவரித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகம் அணு ஆயுதப் போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது... பிரித்தானிய எச்சரிக்கையின் அதிர்ச்சியூட்டும் பின்னணி
போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்யாவிடம் வீழ்ந்த தெற்கு பகுதி நகரமான கெர்சனை மீண்டும் கைப்பற்றுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் உறுதியுடன் தெரிவித்து இருந்த நிலையில் ரஷ்ய படைகளின் இத்தகைய எதிர் நகர்வுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.