மழையால் டிரா ஆன டெஸ்ட்..தொடரை கைப்பற்றிய இந்தியா
டிரினிடாட் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இமாலய இலக்கு
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 255 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 181 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து 365 ஓட்டங்கள் எனும் இமாலய வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
AP
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தேஜ்நரைன் சந்தர்பால் 24 ஓட்டங்களுடனும், பிளாக்வுட் 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
BCCI
மழையால் டிரா
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் மதிய உணவு இடைவேளைக்கு பின் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் போட்டி டிரா ஆனதால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் சூலை 27ஆம் திகதி தொடங்குகிறது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |