ஆரம்பத்திலே செக் வைத்த தமிழக வீரர் அஸ்வின்! சேஸிங்கில் மேற்கிந்திய தீவுகள்
டிரினிடாட் டெஸ்டில் இந்திய அணி நிர்ணயித்த 365 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் விளையாடி வருகிறது.
இரண்டாவது டெஸ்ட்
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 181 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
windiescricket (twitter)
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மே.தீவுகள் அணியில் கேப்டன் கிரேஜ் பிராத்வெயிட் 28 ஓட்டங்களில் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
AFP
அஸ்வின் அபாரம்
அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கென்சியை நான்கு பந்துகளிலேயே ஓட்டங்கள் எடுக்க விடாமல் அஸ்வின் அவுட் ஆக்கினார். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தேஜ்நரைன் சந்தர்பால் 24 ஓட்டங்களுடனும், பிளாக்வுட் 20 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் கடைசி நாளில் மே.தீவுகள் 289 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.
The second #WIvIND Test is evenly poised heading into the final day in Trinidad.#WTC25https://t.co/4hUd6BPlKw pic.twitter.com/CqYxAH098g
— ICC (@ICC) July 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |