மே.தீவுகளை தாக்கிய தாக்கூர்! 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றி
ட்ரினிடாட்டில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்திய அணி இமாலய ஸ்கோர் குவிப்பு
பிரைன் லாரா மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 351 ஓட்டங்கள் குவித்தது. கில் 85 ஓட்டங்களும், கிஷன் 77 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 70 ஓட்டங்களும் விளாசினர்.
Twitter (Windies)
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியை முகேஷ் குமார், ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சின் மூலம் தாக்கினர். தொடக்க வீரர்கள் உட்பட கேப்டன் ஷாய் ஹோப், ஹெட்மையர் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த அதனஸி 50 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 88 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் என மேற்கிந்திய தீவுகள் தடுமாறியது.
Reuters
தொடரை கைப்பற்றிய இந்தியா
இதனால் 100 ஓட்டங்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அல்சரி ஜோசப், குடாகேஷ் மொட்டி அணியை காப்பாற்ற போராடினர்.
ஆனால், தாக்கூர் ஓவரில் ஜோசப் 26 ஓட்டங்களிலும், கடைசி விக்கெட்டான சீல்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் 2-1 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளில் இறுதிவரை களத்தில் நின்ற மொட்டி 34 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் ஷரத்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Ramon Espinosa/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |