சிக்ஸர் மழை பொழிந்த ஹர்திக், சாம்சன்! வீறுகொண்டு எழுந்த இந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 351 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மிரட்டல் கூட்டணி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தப் போட்டியில் படுதோல்வி அடைந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் தான் பிரைன் லாரா மைதானத்தில் இன்று தொடங்கிய 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், சுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 351 ஓட்டங்கள் குவித்தது. கிஷன் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களும், சுப்மன் கில் 85 (92) ஓட்டங்களும் விளாசினர்.
BCCI
சாம்சன்-ஹர்திக் அதிரடி விளாசல்
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர்.
சாம்சன் அதிரடியாக 41 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் 35 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா அவுட் ஆகாமல் 70 (52) ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் குவித்தது. ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளும், மொட்டி, அல்சரி ஜோசப் மற்றும் கரியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
BCCI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |