இதுவே கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் படுதோல்வி
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் கோலி, ரோகித்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் விளையாடினர். இதில் வழக்கத்திற்கு மாறாக அக்சர் படேல் இரண்டாவது வரிசையில் களமிறங்கி விளையாடினார்.
AFP
ராகுல் டிராவிட் கருத்து
தோல்வியின் எதிரொலியாக விமர்சனங்கள் எழுந்தன. ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் படுதோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறுகையில், 'எங்கள் வீரர்களில் சிலரை முயற்சிக்க இதுவே கடைசி வாய்ப்பு. காயம் அடைந்த எங்களின் சில வீரர்கள் NCA யில் உள்ளனர். ஆசிய கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பல வழிகளில் நேரம் இல்லாமல் போகிறோம்' என தெரிவித்துள்ளார்.
Rahul Dravid has defended India's selections in the second #WIvIND ODI ?
— ICC (@ICC) July 30, 2023
More ? https://t.co/OYCA2hFvQO pic.twitter.com/jXagJ3ckOt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |