16 தளங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையம் - எங்கே தெரியுமா?
இந்தியாவில் 16 தளங்களைக் கொண்ட ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சுமார் 7000க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் உள்ளது.
இதில் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையம், 2,70,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 23 நடைமேடைகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையமாக உள்ளது.
16 தள ரயில் நிலையம்
தற்போது 16 தளங்களுடன் இந்தியாவின் உயரமான ரயில் நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைய உள்ள இந்த ரயில் நிலையம், ஜூலை 2027 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலான மும்பை - அகமதாபாத் அதிவேக ரயிலின் முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக இது இருக்கும்.
மேலும், இது புல்லட் ரயில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து என அனைத்து வகையான போக்குவரத்துக்குமான மையமாக அமைய உள்ளது.
மேலும், 16 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் பெரிய வாகன நிறுத்துமிடங்கள், அலுவலக இடங்கள், கடைகள், மால்கள், ஓய்வு அறைகள் மற்றும் நவீன காத்திருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.
அகமதாபாத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான காத்தாடிகளைக் குறிக்கும் கூரை மற்றும் சிதி சாயத்தின் ஜாலியின் சிக்கலான லேட்டிஸ் வேலைப்பாடுகளால் ஈர்க்கப்பட்ட முகப்பு அமைக்கப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |