இந்தியாவின் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது தெரியுமா? உலக சாதனை நிகழ்வு
இந்தியாவில் தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் என மொத்தம் 147 விமான நிலையங்கள் உள்ளது. இதில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன.
ஆனால், இந்தியாவில் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது, அதை ஓட்டியவர் யார்? அது என்ன சாதனை படைத்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பறந்த முதல் விமானம்
இந்தியாவில் இருந்து பறந்த முதல் விமானம் ஹம்பர்ட் பைபிளேன்(Humbert biplane) ஆகும். இந்தியாவிற்கு வந்த முதல் விமானமும் இதுவே.
18 பிப்ரவரி 1911 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகர் அதாவது இன்றைய ப்ரக்யராஜ் நகரில் இருந்து, 9.6 கிமீ தூரத்தை 13 நிமிடங்கள் பயணித்து நைனியில் தரையிறங்கியது.
6,500 கடிதங்களை சுமந்து சென்ற இந்த விமானத்தை ஹென்றி பேக்வெட்(Henri Pequet) என்ற விமானி ஓட்டினார்.
இது உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் விமானம் என்ற உலகளவிலான சாதனையை படைத்தது.
இந்த விமானத்தை 100க்கும் மேற்பட்ட பாகங்களாக கடல் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்து, அதனை பல பிரித்தானிய பொறியாளர்கள் பல நாட்களாக பணியாற்றி ஒன்று சேர்த்தனர்.
முதல் விமான பறப்பை காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு ஒன்று கூடினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |