முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்? 3 அம்ச சமாதான திட்டத்தை அனுப்பிய இந்தியா
india sent 3 part peace plan to end russia ukraine war: ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா தனது 3 அம்ச சமாதான திட்டத்தை அனுப்பியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பலரும் போரை நிறுத்த முயற்சி கொண்டும், போர் முடிவுக்கு வரவில்லை.
அதேவேளையில், இந்தியாவின் போர் நிறுத்த முயற்சிக்கு இரு நாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், "ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கும் பிரதமர் மோடியிடம் மிகச் சிறந்த யோசனைகள் உள்ளன" என கூறினார்.

இதே போல், மற்ற நாடுகளை விட, இந்தியா வைத்திருக்கும் அமைதி திட்டம் வெகு சிறப்பானது என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்ட்ரி சிபிஹா பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவின் 3 அம்ச சமாதான திட்டம்
இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நிறுத்தத்திற்கு இந்தியா தனது 3 அம்ச சமாதான சமாதானத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும். பொதுமக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதும், பதற்றத்தை பெருமளவில் தணிப்பதற்கு வழிவகுப்பதுமே இதன் நோக்கமாகும்.
கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தானிய மற்றும் எரிசக்தி ஏற்றுமதிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. போர் நிலவினாலும், முக்கிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வழித்தடங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
கருங்கடலில் இயங்கும் வர்த்தகக் கப்பல்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்துகிறது. இது அந்த பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு விரிவான பாதுகாப்பை வழங்க முன்மொழிகிறது.
ஏற்கனேவே, அமெரிக்கா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் போர் நிறுத்த முன்மொழிவை அனுப்பியுள்ளன.
எகிப்து மற்றும் துருக்கியின் முன்மொழிவுகள், கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் தானியப் போக்குவரத்தைத் தடையின்றி வைத்திருப்பதை மையமாகக் கொண்டிருந்தன.
அமெரிக்காவின் முன்மொழிவு ஆற்றல் போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியிருந்தது.
ஆனால், இந்தியாவின் முன்மொழிவு எரிசக்தி உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருகிறது.