இந்தியாவின் அதிரடி முடிவால் அதிர்ந்த சீனா... தீவு நாடொன்றிற்கு ரூ 4850 கோடி கடனுதவி
சில நெருக்கடியான சூழலால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டதன் பின்னர், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் நட்பை மீண்டும் கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.4,850 கோடி கடன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்புகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மோடி தற்போது மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது முய்ஸுவின் முந்தைய நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவே வெளியேறு என்ற பரப்புரையை முன்னெடுத்து, தேர்தலிலும் வெற்றிகண்ட அதே தலைவர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஜனாதிபதி முய்சு சீனாவை அதிகமாக நம்பத்தொடங்கியதுடன் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் மக்களிடையே தொடங்கினார். இதனால், இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த அவமானகரமான கருத்துக்களால் நிலைமை மோசமடைந்தது,
சீனாவின் நிதி இருப்பு
இது அந்த தீவு நாட்டிற்கு சுற்றுலாவைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவிற்குள் கோரிக்கை வலுத்தது. இந்த நெருக்கடியை அடுத்து முய்சு தனது அணுகுமுறையை மாற்றியுள்ளதுடன், தற்போது தனது வெளிவிவகாரக் கொள்கை முன்னுரிமைகளையும் மறுபரிசீலனை செய்துள்ளார்.
இந்த நிலையில், ரூ 4,850 கோடி கடன் உதவியை வழங்க இந்தியா எடுத்த முடிவு, மாலத்தீவு பொருளாதாரத்திற்கு நிதி ஆதரவாக மட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் நிதி இருப்புக்கு ஒரு திட்டமிட்ட எதிர் சமநிலையாகவும் அமைந்துள்ளது.
மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான பொருளாதார ஈடுபாட்டைக் குறிக்கும் வகையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், மாலத்தீவால் இந்திய சந்தைகளை எளிதாக அணுகவும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |