இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி..முத்தரப்பு தொடரை கைப்பற்றிய இந்திய அணி
முத்தரப்பு ஏ தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 66ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி 377 ஓட்டங்கள்
தம்புள்ளையில் நடந்த முத்தரப்பு ஏ தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 377 ஓட்டங்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 94 ஓட்டங்களும், திலக் வர்மா 67 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 311 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. வானுஜா சஹன் 62 ஓட்டங்களும், சதீரா சமரவிக்ரமா 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் யாஷ் தாக்கூர், விப்ராஜ் நிகம் தலா 3 விக்கெட்டுகளும், அனுகுல் ராய் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |