தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக பாய முடியாது! பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் கிடையாது - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை சிந்து நதி நீர் வழங்கப்படாது என் இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960ஆம் ஆண்டில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது இரு நாடுகளுக்கும் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து போர் பதற்றம் ஏற்பட்டதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிமாக நிறுத்தி வைத்தது.
ஆனால், முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும்
நிறுத்தி வைக்கப்படும்
இந்நிலையில், பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீண்டும் தொடராத வகையிலும் தனது ஆதரவை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்.
நமது பிரதமர் கூறியது போல, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது. காஷ்மீர் தொடர்பான எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடப்பதனால், அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தொடர்பாக மட்டுமே பேசப்படும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |