2026 டி20 உலகக் கோப்பை: ஐசிசி தொடர்களில் புதிய வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி
டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதியது.
மேற்கிந்திய அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 4 பந்துகள் மீதம் இருக்கும் போதே 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
...and then there were FOUR! 😍
— Star Sports (@StarSportsIndia) March 2, 2026
Super 8s ✅
It's time for the knock-outs ⏳#T20WorldCup #INDvENG #SAvNZ pic.twitter.com/6XGNZ2JoaI
இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஒற்றை ஆளாக போராடி 50 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) தொடர்களில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐசிசி தொடர்களில் அவுஸ்திரேலிய அணி அதிக கோப்புகளை பெற்று இருந்தாலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய பட்டியலில் இந்திய அணி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
ஐசிசி தொடர்களில் 20 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இந்திய அணி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதில் 8 முறை ஒருநாள் உலகக் கோப்பை, 6 முறை டி20 உலகக் கோப்பை மற்றும் 6 முறை சாம்பியன்ஸ் டிராபி அடங்கும்.
இந்திய அணியை தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி 18 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 18 முறையும், இங்கிலாந்து 16 முறையும், பாகிஸ்தான் 16 முறையும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |