அதிக கேட்ச், அதிக சிக்ஸர்ஸ் - பல சாதனைகளை படைத்த இந்திய வீரர்கள்
india and players script record in t20i: இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் இந்தியா வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்திய அணியின் சாதனை
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம், 300 சர்வதேச T20 போட்டிகளை விளையாடிய 2வது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

300 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 200 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 83 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன, மேலும் 10 போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளன.
304 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான், 176 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 116 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 4 போட்டிகளை சமன் செய்துள்ளது. மேலும், 8 போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளன.
269 போட்டிகளுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும், 260 போட்டிகளுடன் மேற்கிந்திய தீவுகள் 4வது இடத்திலும், 243 போட்டிகளுடன் இலங்கை 5வது இடத்திலும் உள்ளன.
அபிஷேக் சர்மாவின் சாதனைகள்
21 பந்துகளில், 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 27 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா, சர்வதேச T20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ஓட்டங்கள் குவித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏற்கனவே, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இந்த பட்டியலில் உள்ளனர்.
மேலும், சர்வதேச T20 போட்டிகளில் பவர்பிளேயில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றார்.
98 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும், 97 சிக்ஸர்களுடன் மார்ட்டின் குப்தில் 3வது இடத்திலும் உள்ளனர்.
திலக் வர்மா சாதனை
திலக் வர்மா இந்த போட்டியில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச T20 போட்டிகளில் ஒரு ஃபீல்டர் பிடித்த அதிக கேட்சுகளுக்கான சாதனையை படைத்துள்ளார்.

இந்தோனேசியாவின் டானில்சன் ஹாவோ வைத்திருந்த 25 என்ற முந்தைய சாதனையை முறியடித்தார்.
அர்ஷ்தீப் சிங் சாதனை
அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில், 2 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், இந்த காலண்டர் ஆண்டில் சர்வதேச T20 போட்டிகளில் மொத்தமாக 38 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு காலண்டர் ஆண்டில்அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், புவனேஸ்வர் குமார் 37 விக்கெட்களை வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.
சர்வதேச அளவில், 2022 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் 39 விக்கெட்களை கைப்பற்றி முதலிடத்திலும், 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் வனிந்து ஹசரங்க 38 விக்கெட்களை கைப்பற்றி 2வது இடத்திலும் உள்ளனர்.