அமெரிக்காவிடம் வரிவிதிப்பால் இந்தியா வீழுமா? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து உலக நாடுகளுக்கு வரிவிதிப்பு தொடர்பில் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்தியா மீதும் வரி விதிப்பில் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இந்தியாவுடைய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க விதித்துள்ள நிலையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
அதாவது, ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள வரி என்பது ஆசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் ஆகியவற்றை வாங்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவிடம் இருந்து நாங்கள் ஆயுதம் வாங்க மாட்டோம் என இந்தியா கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்தியாவுடைய ஏற்றுமதியில் நிறைய விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |