பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் விமானங்களை வழங்கும் சீனா., AMCA போர் விமான திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல்
இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர்விமான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா தயாரிக்கும் 5-வது தலைமுறை ஸ்டெல்த் போர்விமானமான AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டத்துக்கு காபினட் பாதுகாப்பு குழு (Cabinet Committee on Security) ஏற்கனவே 2024 மார்சில் ஒப்புதல் அளித்தது.
தற்போது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த திட்டத்தை DRDO-வின் ஏரோனாடிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) வழியாக செயற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா துரிதப்படுத்தியுள்ளதை அடுத்து இந்தியாவின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, ADA விரைவில் AMCA-வுக்கான மேம்பாட்டு பருவத்திற்கு Expression of Interest (EoI) வெளியிடவுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய தனியார் கம்பெனிகளுடன் கூட்டு ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
AMCA ஒரு ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் கூடிய, உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்படும் போர்விமானமாகும்.
இது செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் சம அளவில் விமான சக்தி கொண்ட நாடாக உயரும்.
இந்திய விமானப்படையின் வலிமை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த ஒப்புதல் வந்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட 41 ஸ்குவாட்ரன்களுக்கு பதிலாக, இந்திய விமானப்படையில் 29 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ள நிலையில், மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இந்த திட்டம் இந்தியாவின் வான்பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AMCA fighter jet India, India 5th generation aircraft, DRDO AMCA, Indian Air Force fighter jets, Indigenous stealth aircraft India, IAF squadron strength 2025, 5th generation aircraft India, DRDO AMCA project, Indian stealth fighter, Rajnath Singh AMCA approval, Indigenous fighter jet India, IAF aircraft strength, AMCA prototype development, Advanced Medium Combat Aircraft, India defence news 2025