ரஷ்ய-பெலாரஸ் இராணுவப் பயிற்சி... இந்தியாவின் அந்த முடிவு: பதட்டமடைந்த அமெரிக்காவும் நேட்டோவும்
ரஷ்ய-பெலாரஸ் கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இந்திய தரப்பில் 65 வீரர்களை அனுப்பி வைத்த விவகாரம் அமெரிக்காவையும் நேட்டோவையும் பதட்டமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவை அச்சுறுத்த
கடந்த 16ம் திகதி முடிவடைந்த Zapad 2025 என்ற இராணுவப் பயிற்சியானது போலந்தில் தொடங்கி ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகவே இராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ரஷ்யா உடனான மிக ஆழமான, நீண்ட நெடிய உறவின் வெளிப்பாடாகவே வீரர்களை அனுப்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் இந்தியாவிற்கு லேசான விரிசல் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் 65 வீரர்களை அனுப்பி வைத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்த கருத்துக்களில் இருந்தே நேட்டோவின் பதட்டம் வெளிப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சியில் கலந்து கொள்வதும், எண்ணெய் வாங்குவத்கும், இந்தியா உடனான ஒத்துழைப்பிற்கு தடையாக உள்ளது என கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதில் பில்லியன் கணக்கான டொலர்களை இந்தியா மிச்சப்படுத்தியுள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இரட்டை முகமாகவே
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளால் தான் என்றும், சிறந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தேடுவோம் என்றும் இந்தியா பலமுறை விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் தடைகள் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்குகிறது. இந்தியாவை விட அதிக எண்ணெய் வாங்கிய போதிலும் சீனா ட்ரம்பின் தண்டனை வரிகளிலிருந்து தப்பிக்கிறது.
இது ட்ரம்ப் நிர்வாகத்தின் இரட்டை முகமாகவே பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பிலிருந்து இதுவரை போலந்திற்குள் 11 ஊடுருவல்கள் நடந்துள்ளன. ட்ரோன் தாக்குதல்களில் இருந்து கூட்டணியைப் பாதுகாக்க, உக்ரைன் மீது பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலத்தை நேட்டோ உத்தரவிட வேண்டும் என்று போலந்து கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |