பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் முக்கிய முடிவு., 32 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில நாட்களாக எதிர்பாராத முடிவுகள் நிகழ்ந்து வருகின்றன.
147 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன.
மீண்டும் எழுச்சிப் பாதையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி., ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிரடி உயர்வு
பார்டர் கவாஸ்கர் டிராபியில் (Border-Gavaskar Trophy) இனி ஐந்து போட்டிகள் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி 1991-92ல் நடைபெற்றது. அதன்பிறகு, நான்கு போட்டிகள் கொண்ட தொடரை நடத்தி வருகின்றனர்.
"டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து டெஸ்ட் தொடர்களை யோசித்துள்ளோம். அதன் மூலம், ரசிகர்கள் முன்பு போலவே நீண்ட வடிவத்தை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்”என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.
நான்கு ஆண்டுகளாக இந்திய அணி
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக பார்டர் - கவாஸ்கர் டிராபியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நான்கு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றது.
2018-19 மற்றும் 2021-22ல் முறையே அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |