அதிகரிக்கும் பதற்றம்... பாகிஸ்தானுக்கு அடுத்த இடியை இறக்கிய இந்தியா
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு கடுமையான நடவடிக்கையாக, அண்டை நாட்டிலிருந்து அனைத்து இறக்குமதிகளையும் இந்தியா தடை செய்துள்ளது.
அரசாங்கத்தின் ஒப்புதல்
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானிலிருந்து போக்குவரத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும் என்பதை வலியுறுத்தியுள்ளதுடன், எந்தவொரு விதிவிலக்குக்கும் அரசாங்கத்தின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும், சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது வேறுவிதமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அல்லது கொண்டு செல்வது, மறு உத்தரவு வரும் வரை உடனடியாகத் தடைசெய்யப்படும் என வர்த்தக அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரே வர்த்தகப் பாதையான வாகா-அட்டாரி எல்லை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து மருந்துப் பொருட்கள், பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவையே முதன்மையாக இறக்குமதி செய்யப்படும். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகளில் இது குறைந்துள்ளது, பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியா 200 சதவீதம் வரி விதித்தது.
நிறுத்தி வைப்பதாக
வெளியான சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இறக்குமதி ஏற்கனவே மிகக் குறைவாகவே இருந்ததாகக் கூறுகின்றன. இருப்பினும், இந்திய அரசாங்கம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியை தடை செய்துள்ளது.
மட்டுமின்றி, பாகிஸ்தானியர்களின் அனைத்து விசாக்களையும் இந்தியா ரத்து செய்திருந்தது. இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய மண்ணை விட்டு வெளியேற காலக்கெடு வழங்கப்பட்டது. இதில் மருத்துவ விசாக்களும் அடங்கும்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளையும் குறைத்துள்ளன.
மேலும், அதிரடி நடவடிக்கையாக பாகிஸ்தான் தங்களது வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய தடை விதித்தது. இது அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான சேவைகளை இயக்கும் இந்திய நிறுவனங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |