DLS முறையால் வெற்றி பெற்ற இந்தியா; 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தும் கோலி படைத்த சாதனை
india beat new zeland by 4 wickets in dls method in 2nd odi: நியூசிலாந்திற்கு எதிரான 2வது ODI போட்டியில், DLS முறையால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
DLS முறையால் வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி 134 ஓட்டங்கள் குவித்து 41 ஓவர்களில் ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அதிகபட்சமாக Daryl Mitchell 55 ஓட்டங்களும், Mitchell Santner 31 ஓட்டங்களும் குவித்தனர்.

குர்நூர் பிரார் 4 விக்கெட்டுகளும், அன்ஷுல் காம்போஜ், ஆகிப் நபி மற்றும் அக்ஸர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், சுப்மன் கில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற, விராட் கோலி 7 ஓட்டங்களிலும், ரோஹித் சர்மா 17 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்திய அணி 26 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, DLS முறைப்படி, 26 ஓவர்கள் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட இலக்கு 109 ஓட்டங்களாக இருந்த நிலையில், இந்திய அணி 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சாதனை படைத்த கோலி
7 ஓட்டங்களில் ஆட்டமிழந்திருந்திலும், நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

விராட் கோலி இதுவரை நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில், 1978 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங், 1971 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் இருந்த நிலையில் கோலி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.