45 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை - இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ள இந்தியா
india beat sri lanka by 124 runs and enters asian game final vs pakistan: ஆசிய விளையாட்டு போட்டியில், 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
45 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா தரப்பில், அதிகபட்சமாக இஷான் கிஷன் 80 ஓட்டங்கள் குவித்தார்.
170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 9.5 ஓவர்களில் வெறும் 45 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நுவனிடு பெர்னாண்டோ 15 ஓட்டங்கள் குவிக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா
124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அக்டோபர் 3 ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.