ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை விஞ்சிய இந்தியா., எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அபார வளர்ச்சி
அமெரிக்காவுக்கான ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியா சீனாவை விஞ்சியது.
2025 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியா சீனாவை விஞ்சியது.
இது இந்தியாவின் உற்பத்தி துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
Make In India மற்றும் Production Linked Incentive (PLI) திட்டங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.
Canalys ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த ஸ்மார்ட்போன்களின் விகிதம் 13 சதவீதம் இருந்தது. 2025-ல் 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேநேரம், சீனாவின் பங்கு 61 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைந்துள்ளது.
2014-15 முதல் 2024-25 வரை இந்தியாவின் மொபைல் உற்பத்தி (Production), ரூ.18,000 கோடியில் இருந்து ரூ.5.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதே காலகட்டத்தில் மொபைல் ஏற்றுமதி (Export), ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக, 127 மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ரூ.1.9 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்கள் 2-ல் இருந்து 300-ஆக அதிகரித்துள்ளன.
2014-15 காலகட்டத்தில் 75 சதவீதம் மொபைல் இறக்குமதி செய்துள்ள இந்தியா, 2024-25 காலகட்டத்தில் இது 0.02 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த வளர்ச்சி, இந்தியாவின் உற்பத்தித் திறனையும், உலக சந்தையில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதையும் வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India smartphone exports 2025, China vs India mobile exports, US smartphone import trends, Make in India success, Indian electronics manufacturing, Mobile export growth India, India overtakes China in tech, India US trade smartphone