T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா

West Indies cricket team Indian Cricket Team Shai Hope Cricket Record Abhishek Sharma
By Karthikraja Oct 15, 2026 08:16 AM GMT
Report

india become 2nd team hit 2000 sixes in t20: இந்தியாவிற்கு எதிரான 4வது T20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷாய் ஹோப் சாதனை சதம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 4வது T20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா | India Become 2Nd Team Hit 2000 Sixes In T20

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப், 50 பந்துகளில் 102 ஓட்டங்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா | India Become 2Nd Team Hit 2000 Sixes In T20

சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ஓட்டங்களை எட்டிய 4வது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையையும் ஹோப் பெற்றார்.

மேலும், தனது 3வது சர்வதேச T20 சதத்தை விளாசிய அவர், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய மேற்கிந்திய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். கிறிஸ் கெயில் 2 சர்வதேச டி20 சதம் அடித்துள்ளார். 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

இந்த டி20 தொடரின் 4 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் உட்பட 261 ஓட்டங்கள் எடுத்து, ஹோப் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக உள்ளார்.

ODI உட்பட ஒட்டுமொத்தமாக 7 போட்டிகளில், 4 சதங்கள் மற்றும் 1 அரைசதம் உட்பட 134.75 சராசரியில் 539 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19.3 ஓவர்களில் 223 ஓட்டங்கள் குவித்து இந்தியா ஆல்அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன், 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்தார். 

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா | India Become 2Nd Team Hit 2000 Sixes In T20

இதன் மூலம், டி20 போட்டிகளில் 102 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன், 100 சிக்ஸர்களை அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில், கீமோ பால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா | India Become 2Nd Team Hit 2000 Sixes In T20

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகளை கொண்ட T20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 2-2 என்ற விகிதத்தில் சமன் செய்துள்ள நிலையில், தொடரை வெல்வதற்கான 5வது T20 போட்டி அக்டோபர் 17 ஆம் திகதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்

24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உட்பட 29 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா, இந்த ஆண்டில் 69 சிக்ஸர் அடித்து, டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்ஸ்; தோற்றாலும் சாதனை படைத்த இந்தியா | India Become 2Nd Team Hit 2000 Sixes In T20

2022 ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் படைத்திருந்த 68 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

இந்தியா தோல்வியை தழுவினாலும், T20 போட்டிகளில் 2,000 சிக்ஸர்களை கடந்த 2வது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 

ரூ.5 கோடி குறைவான ஊதியத்துடன் SRH அணிக்கு செல்லும் நடராஜன்

ரூ.5 கோடி குறைவான ஊதியத்துடன் SRH அணிக்கு செல்லும் நடராஜன்

இந்திய அணி, 297 T20 போட்டிகளில் விளையாடி, 2,000 சிக்ஸர்களை அடித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள், 259 T20 போட்டிகளில் விளையாடி, 2,026 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளது.

1,585 சிக்ஸர்களுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும், 1,507 சிக்ஸர்களுடன் பாகிஸ்தான் 4வது இடத்திலும்,1,407சிக்ஸர்களுடன் தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும் உள்ளது. 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US