பிரிக்ஸ் அமைப்பில் இணைய காத்திருக்கும் பாகிஸ்தான் - முட்டுக்கட்டை போடும் இந்தியா
india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளது.
பிரிக்ஸ் மாநாடு
18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் இணைந்து BRIC அமைப்பை உருவாக்கியது.
2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவும் இந்த அமைப்பில் இணைய BRICS என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பின்னர், ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா என 7 நாடுகள் இணைய தற்போது 11 நாடுகளுடன் இந்த அமைப்பு BRICS+ என உள்ளது.
பாகிஸ்தான் இணைய இந்தியா எதிர்ப்பு
இந்த அமைப்பில் இணைய மேலும் 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளன. இதில், 2023 ஆம் ஆண்டிலே பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது வரை BRICS அமைப்பில் அதனால் இணைய முடியவில்லை.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்பாட்டு வங்கியில் 580 மில்லியன் டொலர் பங்குகளை பாகிஸ்தான் வாங்கி இருந்தது.
நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைந்தால், உலக வங்கி போன்ற மேற்கத்திய நாடுகள் தலைமையிலான நிறுவனங்களின் நிதி சார்பை தவிர்த்து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்பாட்டு வங்கி (NDB) வாயிலாக கடன்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதியுதவியை பெற முடியும்.
பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைய சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தாலும், இந்தியா தனது வீடோ அதிகாரம் மூலம் பாகிஸ்தான் அமைப்பில் இணைய தடையாக உள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் சேர்க்கை விதிகளின்படி, உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவு இருந்தால் மட்டுமே புதிய உறுப்பினர்களை கூட்டமைப்பில் சேர்க்க முடியும்.