விண்ணில் புதிய சீனப் பெருஞ்சுவர் அமைக்கும் சீனா., இந்தியா விண்வெளி பாதுகாப்பில் தீவிரம்
சீனா அதன் விண்வெளி பாதுகாப்பை பலப்படுத்திவரும் நிலையில், இந்தியா தனது விண்வெளி கேடயத்தை உருவாக்கிவருகிறது.
விண்வெளி பாதுகாப்பு என்பது இன்றைய தேசிய பாதுகாப்பில் முக்கிய தளமாக மாறியுள்ளது.
சீனா தனது உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி போர்க்கலன்கள் வளர்ச்சியை வேகமாக தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்தியாவும் தன்னுடைய ‘Space Shield’ திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது.
மொத்தம் 52 பாதுகாப்பு செயற்கைக்கோள்கள் 2029-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இந்திய பாதுகாப்பு திட்டம் SBS-3 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் செயலில் உள்ள Cartosat, RISAT, Microsat போன்றவற்றைவிட வேகமாகவும், செயற்கையாகவும் செயல்பட உள்ளன.
இந்தியா, மே 2025-இல் நடைபெற்ற “Operation Sindoor” எனும் பாகிஸ்தானுடனான குறுகிய போரின் போது, ரியல்-டைம் உளவு தரவுகள் இல்லாததால் ஏற்பட்ட சவால்களைச் சந்தித்தது. இதுதான் புதிய செயற்கைக்கோள்கள் அவசியம் என்பதை உணர்த்தியது.
இந்நிலையில், ரூ.26,968 கோடி மதிப்புள்ள SBS-3 திட்டம் 2024-2029 காலத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ISRO 21 செயற்கைக்கோள்களை உருவாக்கும். மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை Tata Advanced Systems, Ananth Technologies போன்ற இந்திய தனியார் நிறுவனங்கள் உருவாக்கும்.
இந்த செயற்கைக்கோள்கள் LEO மற்றும் GEO களத்தில் செயல்படும். இதில் AI தொழில்நுட்பம், SAR, Thermal Imaging வசதிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இது இந்தியாவுக்கு அனைத்து வானிலை மற்றும் இரவு நேர உளவுத்தகவல்களை மிக வேகமாக வழங்கும்.
மற்றொரு முக்கிய காரணி: சீனா–பாகிஸ்தான் உளவு தகவல் பகிர்வு.
Operation Sindoor போர் சமயத்தில் சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல் பகிரப்பட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
மூலதன ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படுகின்றன
FY26-இல் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் ரூ.50,000 கோடிக்கான கூடுதல் ஒதுக்கீடு பரிசீலனையில் உள்ளது.
இந்த அனைத்து முயற்சிகளும் சுதந்திர, சுயாதீன விண்வெளி பாதுகாப்பு வளமை ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |