இந்தியாவுக்குக் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயில் உக்ரைனின் ரத்தம் உள்ளது! உக்ரைன் அமைச்சர் காட்டம்
ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் உக்ரைனின் ரத்தம் இருக்கிறது என அமைச்சர் டிமிட்ரோ காட்டம்.
நாங்கள் இந்தியாவுடன் நட்புறவாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறோம்.
ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைனின் ரத்தத்தை வாங்குகிறது என அந்நாட்டின் அமைச்சர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த நிலையில, இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களிடம் பேசுகையில், உக்ரைன் இந்தியாவிடமிருந்து அதிக நடைமுறை ஆதரவை எதிர்பார்க்கிறது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் உக்ரைனின் ரத்தம் இருக்கிறது. இந்தியாவுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய்யிலும், உக்ரேனிய ரத்தத்தின் பெரும் பகுதி உள்ளது.
நாங்கள் இந்தியாவுடன் நட்புறவாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். இதோடு, ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்குவதைத் தொடரும் இந்தியாவின் முடிவு, உக்ரைனை ஆச்சரியப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.