சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள சக்திவாய்ந்த ஆயுத ட்ரோன்களை வாங்கும் இந்தியா
அண்டை நாடான சீனா மற்றும் பாக்கிஸ்தானுடன் பதட்டங்கள் நீடிப்பதால், கடல் மற்றும் நில பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்காவிலிருந்து 30 ஆயுத ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் டியாகோவை தளமாகக் கொண்ட General Atomics-ல் தயாரிக்கப்பட்ட 30 MQ-9B Predator ஆளில்லா விமானங்களை 3 பில்லியன் டொலர் செலவில் வாங்குவதற்கு இந்திய அரசாங்கம் அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இராணுவ திறன்களை அதிகரிக்கும், ஏனெனில் இப்போது அது கொண்டிருக்கும் ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும்.
MQ-9B ட்ரோன் சுமார் 48 மணி நேரம் பறக்கக்கூடியது மற்றும் சுமார் 1,700 கிலோகிராம் (3,700 பவுண்டுகள்) எடையை சுமக்க முடியும்.
இது தென்னிந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்களை சிறப்பாக கண்காணிக்கும் திறனை இந்திய கடற்படைக்கு வழங்கும், மேலும் இமயமலையில் சர்ச்சைக்குரிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சிறப்பாக பயன்படுத்த இராணுவத்துக்கு உதவியாக இருக்கும்.