இந்தியா - சீனா நேரடி விமான போக்குவரத்து சேவை தொடக்கம்: இருதரப்பு உறவில் முன்னேற்றம்
இந்தியா - சீனா இடையே நேரடியான விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட விமான சேவை
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இமயமலை பகுதியில் இருநாடுகளும் இடையிலான தீவிரமான எல்லை மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் நீடித்தது.

கடந்த ஆண்டு இருதரப்புகளும் இடையில் எல்லைக் கண்காணிப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை சீர்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர்.
ஆகஸ்ட் மாதம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை

இந்நிலையில் இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ 6E 1703 விமானம் சீனாவின் குவாங்சூவில் நகரில் திங்கட்கிழமை தரையிறங்கியது.
இதையடுத்து சீன மூத்த தூதர அதிகாரி கின் யோங், சீனா - இந்தியா இடையே இது முக்கியமான நாள் என குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |