பாகிஸ்தான் உடனான எல்லையை மூடும் இந்தியா - பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா பதிலடி
இதனையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தான் அதிகாரிகள் மே 1 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை தாற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |