வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள்
2025 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் வீரர்களை புறக்கணித்துள்ளனர்.
இந்திய வீரர்கள் முடிவு
துபாயில் நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 போட்டியின் வெற்றிக்கு பிறகு பாகிஸ்தானுடன் கைகுலுக்குவதற்கு இந்திய அணி மறுத்துவிட்டது.
அதே நேரம் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்குவதற்காக காத்திருந்த போது டிரஸ்ஸிங் அறை கதவுகளை இந்திய அணி வீரர்கள் மூடினர். சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த சம்பவம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
அதாவது போட்டி ஆரம்பிக்கும் முன் நடைபெறும்டாஸுக்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலைத் தவிர்த்த இந்திய அணி வீரர்கள் போட்டியின் முடிவின் போதும் அதையே பின்பற்றனர்.
இந்தியாவுக்காக வெற்றி ரன்களை அடித்த யாதவ், தனது பேட்டிங் பார்ட்னர் சிவம் துபேவுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் போட்டிக்குப் பிறகு எதிரணியுடன் பாரம்பரியமாக கைகுலுக்கிக் கொள்ளும் நடைமுறையை மறுத்துவிட்டார்.
இருப்பினும், இந்திய அணியினர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டனர், பின்னர் தங்கள் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டனர்.
இதனிடையே மைதானத்தில் நின்று இந்திய டிரஸ்ஸிங் அறையைப் பாகிஸ்தான் வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய அணி வீரர்களின் டிரஸ்ஸிங் அறை மூடப்பட்டிருந்ததால் திரும்பிச் சென்றனர்.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லை மோதல்கள் காரணமாக இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று வலுவான எதிர்ப்பு வந்த நிலையில் நேற்று போட்டி நடைபெற்றது.
போட்டியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்பதாக கூறிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்" என்றார்.
"India wins, but no handshake with Pakistan. This isn’t just cricket, it’s a message for Pahalgam. 🔥🇮🇳"#INDvsPAK | Surya kumar Yadav | Abhishek Sharma | Tilak verma | Kuldeep Yadav | pic.twitter.com/cDDfK9P9aQ
— Harsh Vardhan (@harshvard100710) September 14, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |