இந்திய மாணவரை விலங்கிட்டு கைது செய்து நாடுகடத்திய அமெரிக்கா: அதிர்ச்சி வீடியோ
இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் தரையில் தள்ளி கைது செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய மாணவர் விலங்கிட்டு கைது
கடும் அதிர்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள Newark லிபர்ட்டி விமான நிலையத்தில் நடந்துள்ளது.
அந்த வீடியோவில், அமெரிக்க அதிகாரிகள் இந்திய மாணவர் ஒருவரை தரையில் தள்ளி, அவருக்கு கைவிலங்கிட்டு கைது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., சீனாவிற்கு பதிலாக வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்
அவர் நாடுகடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக இந்திய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
The United States continues to welcome legitimate travelers to our country. However, there is no right to visit the United States. We cannot and will not tolerate illegal entry, abuse of visas, or the violation of U.S. law. pic.twitter.com/WvsUb4Mtqu
— U.S. Embassy India (@USAndIndia) June 10, 2025
அமெரிக்காவோ, எங்கள் நாட்டுக்கு சட்டப்படி வந்தால் வரவேற்போம், சட்டத்தை மீறினால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என எக்ஸில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |